Last Updated:
இனி உலக நாடுகள் தங்களின் புதிய ஆற்றல் தேவையை இந்தியாவின் சூரிய ஒளி மூலம் கட்டமைக்கும் – ஆனந்த் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் (AGM) உரையாற்றிய புதிய ஆற்றல் மற்றும் எண்ணெய் உற்பத்திப் பிரிவின் இயக்குனர் ஆனந்த் அம்பானி, நிறுவனத்தின் பசுமை ஆற்றல் திட்டங்கள் மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
பங்குதாரர்களிடம் உரையாற்றியபோது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பசுமை ஆற்றல் திட்டங்கள் மூலம் இந்தியாவில் சுமார் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று ஆனந்த் அம்பானி அறிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜிகா காம்ப்லெக்ஸ் மற்றும் கச் சோலார் ஃபார்ம் ஆகிய திட்டங்கள் இணைந்து இந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளன.
இதில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆப்பரேட்டர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் எனப் பல தரப்பினரும் பயனடைவர்.
இந்த தூய்மையான ஆற்றல் மாற்றம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிச் செலவைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க உதவும். வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான மின்சாரச் செலவும் இதன் மூலம் குறையும்.
தொடர்ந்து பேசிய ஆனந்த் அம்பானி “உலகம் தனது பழைய ஆற்றல் தேவையை மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் மூலம் கட்டமைத்தது. ஆனால், இனி உலக நாடுகள் தங்களின் புதிய ஆற்றல் தேவையை இந்தியாவின் சூரிய ஒளி மூலம் கட்டமைக்கும்” என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய இயற்கை எரிவாயு உற்பத்தி நாளொன்றுக்கு 26 MMCMD ஆக உள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் சுமார் 30% ஆகும். மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி நாளொன்றுக்கு 18,000 பேரல்களாக உள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக எல்என்ஜி (LNG) எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டபோது, ரிலையன்ஸ் நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயுவை நகர விநியோகம், உர உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி போன்ற முக்கியத் துறைகளுக்குத் தடையின்றி நாட்டின் தேவைக்கேற்ப எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Reliance AGM 2026: பசுமை ஆற்றல் திட்டங்கள் மூலம் 2 லட்சம்பேருக்கு வேலை! ஆனந்த் அம்பானி அதிரடி அறிவிப்பு..

