• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பு! ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழ்கிறார்! பணக்காரர்களின் பானி இதுதானா? | Why Elon Musk Chose a 400 Sq Ft House Despite His Massive Fortune

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பு! ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழ்கிறார்! பணக்காரர்களின் பானி இதுதானா? | Why Elon Musk Chose a 400 Sq Ft House Despite His Massive Fortune
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பு! ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழ்கிறார்! பணக்காரர்களின் பானி இதுதானா?

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. இவருடைய சொத்து மதிப்பு ஒரு சில முக்கிய முன்னணி நாடுகளின் பொருளாதாரத்திற்கு சமமாக இருப்பதாக அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி யாருமே தொட முடியாத உச்சத்தில் இருக்கும் இவர் இன்னும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.

எலான் மஸ்க் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக செலவு செய்வதை விட தனது தொழிலுக்காக அதிகம் முதலீடு செய்து வருகிறார். விண்வெளி ஆராய்ச்சி, மின்சார வாகனம் எனப் பல விஷயங்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்திருக்கிறார். இவ்வளவு செலவு செய்யும் ஒருவர் பிரம்மாண்டமான பங்களாவில் இருப்பார் என்று தானே யோசிக்கிறீர்கள்? அதுதான் இல்லை அவர் டெக்சாஸில் உள்ள ஒரு சிறிய 400 சதுர அடி வீட்டில் தான் இன்னும் வசித்து வருகிறார்.

இந்த 400 சதுர அடி வீட்டில் ஒரு லிவ்விங் ஏரியா, ஒரு பெட்ரூம், ஒரு கிச்சன் மற்றும் பாத்ரூம் இருக்கிறது. ஒரு பில்லியனர் எப்படி இருப்பார் என்பதை ஒப்பிட்டு பார்க்கும்போது இவர் மிகமிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார். பிரம்மாண்டமாக பங்களாக்களை கட்டி அதை பராமரிப்பதற்காக செலவு செய்வதை விட மஸ்கிற்க்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் இந்த சிறிய வீட்டில் செய்து வைத்திருக்கிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மற்ற உலக பணக்காரர்களை எல்லாம் ஓரங்கட்டி.. ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பைக் கொண்ட முதல் ட்ரில்லியனராக மாறினார்.

ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பு! ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழ்கிறார்! பணக்காரர்களின் பானி இதுதானா?

உலகப் பணக்காரர்கள் தங்களை விட, தங்களுடைய தொழிலை விரிவுபடுத்தி.. பன்முகப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துவார்கள் என்று பலர் கூறக் கேட்டிருப்போம். அதற்கு உண்மையான உதாரணமாய் மாறியிருக்கிறார் எலான் மஸ்க். சிறிது பணம் சேர்ந்தவுடன் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவு பணம் இருந்தாலும் வீண் செலவு செய்யக்கூடாது என்று நினைத்து வளர்ச்சி மற்றும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து வருகிறார்.

பணக்காரர்களின் பாணி இதுதான் போல என்று நம்மையும் இது யோசிக்க வைக்கிறது. எங்கு முதலீடு செய்தால் அதிகமான வருமானம் கிடைக்குமோ? அதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 2020-ஆம் ஆண்டிலேயே எலான் மஸ்க் கலிபோர்னியாவிலிருந்து டெக்சாஸிற்கு குடிப்பெயர்ந்தார். கலிபோர்னியாவில் தனக்கு இருந்த கோடிக்கணக்கான சொத்துக்களையும் விற்பனை செய்தார். தன்னுடைய முக்கிய நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு மிக அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளார். தற்போதைய செய்திகளின் அடிப்படையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அங்குள்ள தங்குமிடங்களிலேயே அதிக நேரம் இருக்கிறார். இவருடைய இந்த முடிவு நமக்கெல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றை தான். எவ்வளவு பணம் இருந்தாலும் ஒழுக்கமான முறையில் முதலீடு செய்து வந்தால் அபார வளர்ச்சி சாத்தியமே!

Share This Article

Story first published: Friday, June 19, 2026, 7:00 [IST]

Other articles published on Jun 19, 2026

Read More

Previous Post

Tamil Nadu Assembly Session LIVE: 2வதாக பாடப்பட்ட தேசிய கீதம்! சபாநாயகர் சொன்ன விளக்கம்! | Tamil Nadu Assembly Session LIVE: TVK Vijay Govt First Assembly Session Today Latest News in Tamil

Next Post

கிள்ளானிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் காயம் | Makkal Osai

Next Post
கிள்ளானிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் காயம் | Makkal Osai

கிள்ளானிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin