• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tamil Nadu Assembly Session LIVE: 2வதாக பாடப்பட்ட தேசிய கீதம்! சபாநாயகர் சொன்ன விளக்கம்! | Tamil Nadu Assembly Session LIVE: TVK Vijay Govt First Assembly Session Today Latest News in Tamil

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in இந்தியா
Reading Time: 8 mins read
0
Tamil Nadu Assembly Session LIVE: 2வதாக பாடப்பட்ட தேசிய கீதம்! சபாநாயகர் சொன்ன விளக்கம்! | Tamil Nadu Assembly Session LIVE: TVK Vijay Govt First Assembly Session Today Latest News in Tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Tamilnadu

oi-Halley Karthik

Time
Updated: Thursday, June 18, 2026, 12:05 [IST]

சென்னை: விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முழு சட்டமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த கூட்டம் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை உயர்வு போன்ற விஷயங்களை விஜய் அறிவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

tamil nadu  assembly  vijay  TVK

கண்ணாடியை பார்த்து பேசுறீங்க சார்

கடந்த ஒரு மாதங்களில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 4 சாதிய ஆணவ படுகொலைகள் நடந்திருக்கின்றன. முதல்வர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது, எங்கள் அரசை குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், அவரது ஆட்சியில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்றுள்ளன. முதல்வரின் விமர்சனங்களை பார்க்கும்போது, கண்ணாடியை பார்த்து பேசுறீங்க சார் என்கிற சினிமா காமெடிதான் நினைவுக்கு வருகிறது.

– சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் ஏற்படுத்திய வளர்ச்சி

காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாக இது இருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆஹா, ஓஹோ என்று பேசியிருந்தார். கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் இவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதா? இல்லை. கடந்த ஆட்சியில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்திய வளர்ச்சி அது.

– சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் உரை – கன்டென்ட் மெட்டீரியல்

ஆளுநர் உரை - கன்டென்ட் மெட்டீரியல்

ஆளுநர் உரை, ஆளும் கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாகத்தான் இருக்கிறது. எங்கள் உரையை கடந்த ஆட்சியில் ஆளுநர் முழுமையாக படித்தது இல்லை. ஆனால், இந்த அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை ஆளுநர் முழுமையாக படித்திருக்கிறார். அப்படியெனில், இந்த அரசுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

– சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

அடிப்படை உறுப்பினர் மட்டுமே

எனது மகன் மிதுன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. கட்சி பொறுப்புகளில் வர மாட்டார். பொறுப்புகள் வழங்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. – எடப்பாடி பழனிசாமி

அடிப்படை உறுப்பினர் மட்டுமே

அடிப்படை உறுப்பினர் மட்டுமே

எனது மகன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே. கட்சி பொறுப்புகளில் வர மாட்டார். பொறுப்புகள் வழங்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

தவறு இல்லை

தவறு இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், 2வதாக தேசிய கீதமும் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்.

வினா-விடை நேரம் இருக்காது

ஜூன் 19, 22, 23ம் தேதிகளில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும். இந்த 3 நாட்களில் வினா-விடை நேரம் இருக்காது. – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர்

சட்டமன்ற கூட்டத்தொடரை 3 நாட்களுக்கு நடந்த முடிவு அலுவல் ஆய்வு குழு முடிவு. ஜூன் 19, 22, 23ம் தேதிகளில் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு.

சட்டம் ஒழுங்கு குறித்து வீர வசனம் பேசியிருந்தார்கள். ஆனால் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கே ஒரு பாதுகாப்பு படை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. – எடப்பாடி பழனிசாமி

சட்டம் ஒழுங்கு மோசம்

எதிர்பார்க்கப்பட்ட எந்த திட்டமும் இடம் பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற செய்திதான் ஆளுநர் உரையில் இருந்தது. வழக்கம் போல ஆளுநர் உரையில் வெளியிடப்படும் கனிம வளம் பற்றிய செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது. போதை பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் பேசியிருந்தார். ஆனால், ஏராளமான குற்றங்கள் நடந்திருக்கிறது. ஆட்சி பொறுப்பு ஏற்று 38 நாட்களில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரலை தொடரும். கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றுவார். – அமைச்சர் ராஜ்மோகன்

தமிழ்த்தாய் வாழ்த்து – அமைச்சர் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து - அமைச்சர் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுத்து, முதலில் பாடப்பட்டது. இதையடுத்து இரண்டவதாக தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் கருப்பு பேட்ஜை திமுகவினர் அணிந்து வந்திருக்க வேண்டும். மிஸ் செய்துவிட்டார்கள். – அமைச்சர் ராஜ்மோகன்

ஆட்சியாளர்களுக்கு ஆதரவு

ஆட்சியாளர்களுக்கு ஆதரவான உரையாகத்தான் ஆளுநர் உரை இருந்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது – பிரேமலதா விஜயகாந்த்

ஆளுநர் உரை ஏமாற்றம்

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதை தமிழக அரசு, மத்திய அரசு பக்கம் தள்ளியிருக்கிறது. தமிழக அரசு தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காது என்பது ஏமாற்றமளிக்கிறது. சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்து கவர்னர் உரையில் ஏதும் இல்லை. இந்த அரசு சுற்றுச்சூழல் விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

– தமிமுன் அன்சாரி

புறப்பட்டார் ஆளுநர்

புறப்பட்டார் ஆளுநர்

சட்டப்பேரவையிலிருந்து புறப்பட்டார் ஆளுநர் அர்லேக்கர். சுமார் 39 நிமிடங்கள் தமிழக அரசின் அறிக்கையை வாசித்திருந்தார் ஆளுநர். ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் வாசித்து முடித்ததையடுத்து, ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து புறப்பட்டார்.

தனி கவனம்

கள்ளச்சந்தையில் மது விற்பனையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்ததும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை ஒழிப்பதில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அமைதியான, பாதுகாப்பான தமிழகம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது.

வெள்ளை அறிக்கை

சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை, அதனை வெளிக்கொண்டு வரும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிகிறது. கடந்த ஆட்சியின் முறையற்ற செயல்முறையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலை கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது – ஆளுநர் அர்லேக்கர்

ஆளுநர் உரை நிறைவு

ஆளுநர் உரை நிறைவு

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்திருக்கிறார். அண்ணாவின் உரையை மேற்கோள்காட்டி ஆளுநர் பேசியிருந்தார். ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் வாசித்து வருகிறார்

தொழில் தொடங்க நடவடிக்கை

கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை. நிறுவனங்கள் தொழில் தொடங்க விரைவாக ஒப்புதல் வழங்க ஆணையம் அமைக்கப்படும். 2031ம் ஆண்டில் நாட்டின் முன் மாதிரியான மாநிலமாக தமிழகம் மாறும்.

சமூகநீதி கணக்கெடுப்பு

சமூகநீதி கணக்கெடுப்பு

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு செய்த உடன், தமிழக அரசு சமூகநீதி கணக்கெடுப்பை மேற்கொள்ளும்

மேகதாது விவகாரம்

மேகதாது விவகாரம்

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் சட்ட நடவடிக்கை தொடரும். தமிழகத்திற்கான உரிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. உபரி நீரை மட்டுமே கர்நாடாக வழங்குகிறது. – ஆளுநர் அர்லேக்கர்

மொழிக்கொள்கை

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே தொடரும். தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். – ஆளுநர் அர்லேக்கர்

இரு மொழிக்கொள்கையே தொடரும்

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே தொடரும் என ஆளுநர் உரையில் உறுதி

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

மாநிலத்தின் கடன் 2 மடங்காக உயர்ந்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறை இருந்தாலும் கூட, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் உறுதி.

அனைவருக்கும் அனைத்தும்

அனைவருக்கும் அனைத்தும்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஆட்சி இருக்கும் என்று ஆளுநர் உரையில் உறுதி

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

அண்ணா உரையை சுட்டிக்காட்டி, ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் உரை. ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் என்கிற அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி ஆளுநர் பேச்சு.

2வதாக தேசிய கீதம்

தமித்தாய் வாழ்த்து பாடலை தொடர்ந்து, 2வதாக தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

தமிழ்த்தாய் வாழத்து பாடலுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழகத்தின் 17வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இது தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடராகும்.

சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் அர்லேக்கர்

READ MORE

இன்று சட்டமன்ற கூட்டத்தில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2500, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவாரா? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா?

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இப்போது வரை தேசிய கீதம்தான் முதலில் பாடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதுதான் மரபு. அந்த வகையில் இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கும்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கருப்பு பேட்ஜ்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், ‘வாய் திறங்க சிஎம்’ என்று கருப்பு பேட்ஜ் அணிந்துக்கொண்டு சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள்.

கருப்பு பேட்ஜ், பதாகை

கருப்பு பேட்ஜ், பதாகை

முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசுக்கு எதிராக கருப்பு பேட்ஜ் மற்றும் பதாகைகளை ஏந்தி சட்டமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள். சட்டமன்றம் கெட்டுவிட்டதாக திமுக எம்எல்ஏக்கள் முழக்கம்.

பதாகை ஏந்தி வந்த உதயநிதி ஸ்டாலின்

பதாகை ஏந்தி வந்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை விஜய் தலைமையிலான அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காப்பதாக, அரசை கண்டித்து பதாகை ஏந்தி முழக்கமிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள்

எடப்பாடி பழனிசாமி வருகை

எடப்பாடி பழனிசாமி வருகை

தமிழக சட்டப்பேரவை இன்றும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வந்தார்.

முதலமைச்சர் விஜய் வருகை

முதலமைச்சர் விஜய் வருகை

தமிழக சட்டப்பேரவை இன்னும் சிறிது நேரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வந்துள்ளார்.

ஆளுநர் வருகை

சட்டமன்ற கூட்டதொடர் தொடங்க இருக்கும் நிலையில், ஆளுநர் அர்லேக்கர் சட்டமன்றத்திற்கு வருகை

சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் அர்லேக்கர்

சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழகத்தின் 17வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இது தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடராகும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்

தமிழ்த்தாய் வாழத்து பாடலுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

2வதாக தேசிய கீதம்

தமித்தாய் வாழ்த்து பாடலை தொடர்ந்து, 2வதாக தேசிய கீதம் பாடப்பட்டு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

அண்ணா உரையை சுட்டிக்காட்டி, ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் உரை. ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் என்கிற அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி ஆளுநர் பேச்சு.

அனைவருக்கும் அனைத்தும்

அனைவருக்கும் அனைத்தும்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஆட்சி இருக்கும் என்று ஆளுநர் உரையில் உறுதி

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

மாநிலத்தின் கடன் 2 மடங்காக உயர்ந்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறை இருந்தாலும் கூட, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் உறுதி.

இரு மொழிக்கொள்கையே தொடரும்

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே தொடரும் என ஆளுநர் உரையில் உறுதி

மொழிக்கொள்கை

தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே தொடரும். தமிழை சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். – ஆளுநர் அர்லேக்கர்

மேகதாது விவகாரம்

மேகதாது விவகாரம்

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் சட்ட நடவடிக்கை தொடரும். தமிழகத்திற்கான உரிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. உபரி நீரை மட்டுமே கர்நாடாக வழங்குகிறது. – ஆளுநர் அர்லேக்கர்

சமூகநீதி கணக்கெடுப்பு

சமூகநீதி கணக்கெடுப்பு

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு செய்த உடன், தமிழக அரசு சமூகநீதி கணக்கெடுப்பை மேற்கொள்ளும்

தொழில் தொடங்க நடவடிக்கை

கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை. நிறுவனங்கள் தொழில் தொடங்க விரைவாக ஒப்புதல் வழங்க ஆணையம் அமைக்கப்படும். 2031ம் ஆண்டில் நாட்டின் முன் மாதிரியான மாநிலமாக தமிழகம் மாறும்.

ஆளுநர் உரை நிறைவு

ஆளுநர் உரை நிறைவு

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்திருக்கிறார். அண்ணாவின் உரையை மேற்கோள்காட்டி ஆளுநர் பேசியிருந்தார். ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் வாசித்து வருகிறார்

வெள்ளை அறிக்கை

சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை, அதனை வெளிக்கொண்டு வரும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிகிறது. கடந்த ஆட்சியின் முறையற்ற செயல்முறையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலை கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது – ஆளுநர் அர்லேக்கர்

தனி கவனம்

கள்ளச்சந்தையில் மது விற்பனையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்ததும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. போதைப்பொருட்களை ஒழிப்பதில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அமைதியான, பாதுகாப்பான தமிழகம் என்ற அடிப்படையில் அரசு செயல்படுகிறது.

புறப்பட்டார் ஆளுநர்

புறப்பட்டார் ஆளுநர்

சட்டப்பேரவையிலிருந்து புறப்பட்டார் ஆளுநர் அர்லேக்கர். சுமார் 39 நிமிடங்கள் தமிழக அரசின் அறிக்கையை வாசித்திருந்தார் ஆளுநர். ஆளுநர் உரையின் தமிழ் மொழிபெயர்ப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் வாசித்து முடித்ததையடுத்து, ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து புறப்பட்டார்.

ஆளுநர் உரை ஏமாற்றம்

சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதை தமிழக அரசு, மத்திய அரசு பக்கம் தள்ளியிருக்கிறது. தமிழக அரசு தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காது என்பது ஏமாற்றமளிக்கிறது. சுற்றுச்சூழல் அபாயங்கள் குறித்து கவர்னர் உரையில் ஏதும் இல்லை. இந்த அரசு சுற்றுச்சூழல் விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

– தமிமுன் அன்சாரி

ஆட்சியாளர்களுக்கு ஆதரவு

ஆட்சியாளர்களுக்கு ஆதரவான உரையாகத்தான் ஆளுநர் உரை இருந்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது – பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்த்தாய் வாழ்த்து – அமைச்சர் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து - அமைச்சர் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கொடுத்து, முதலில் பாடப்பட்டது. இதையடுத்து இரண்டவதாக தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் கருப்பு பேட்ஜை திமுகவினர் அணிந்து வந்திருக்க வேண்டும். மிஸ் செய்துவிட்டார்கள். – அமைச்சர் ராஜ்மோகன்

2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரலை தொடரும். கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றுவார். – அமைச்சர் ராஜ்மோகன்

சட்டம் ஒழுங்கு மோசம்

எதிர்பார்க்கப்பட்ட எந்த திட்டமும் இடம் பெறவில்லை. வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற செய்திதான் ஆளுநர் உரையில் இருந்தது. வழக்கம் போல ஆளுநர் உரையில் வெளியிடப்படும் கனிம வளம் பற்றிய செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது. போதை பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் பேசியிருந்தார். ஆனால், ஏராளமான குற்றங்கள் நடந்திருக்கிறது. ஆட்சி பொறுப்பு ஏற்று 38 நாட்களில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சட்டம் ஒழுங்கு குறித்து வீர வசனம் பேசியிருந்தார்கள். ஆனால் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கே ஒரு பாதுகாப்பு படை அமைக்க வேண்டிய நிலை உள்ளது. – எடப்பாடி பழனிசாமி

READ MORE

English summary

Tamil Nadu Assembly Session LIVE Updates in Tamil (தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்): Check Out the latest news updates on the first Assembly session under the TVK Vijay government starts today in Chennai with Governor Rajendra Vishwanath Arlekar’s customary address followed by TN CM Vijay Speech and much more at Oneindia Tamil.

Read More

Previous Post

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

ரூ. 9,49,50,50,00,00,000 சொத்து மதிப்பு! ஆனால் 400 சதுர அடி வீட்டில் வாழ்கிறார்! பணக்காரர்களின் பானி இதுதானா? | Why Elon Musk Chose a 400 Sq Ft House Despite His Massive Fortune

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In