• Login
Thursday, June 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இன அழிப்பின் நினைவகம் செம்மணி: நல்லூரில் தீர்மானம்

GenevaTimes by GenevaTimes
June 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இன அழிப்பின் நினைவகம் செம்மணி: நல்லூரில் தீர்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





நிதர்ஷன் வினோத்


செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்தை, எம்மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பின் சாட்சியமாகப் பேணும் வகையில் அதனை ஓர் நினைவகமாக (Memorial) மாற்றும் முன்மொழிவை நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் சபை அமர்வில் முன்வைத்துள்ளார்.


இந்த முன்மொழிவு குறித்து உரையாற்றிய தவிசாளர் மயூரன், “இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள், இன்று செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். எம்மீது நிகழ்த்தப்பட்ட கோரமான இன அழிப்பின் சாட்சியமாக இந்த மயானம் காணப்படுகின்றது. இந்தச் சாட்சியங்களைப் பாதுகாப்பதும், அதன் வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கடத்துவதும் எமது தார்மீகப் பொறுப்பாகும்” என்று குறிப்பிட்டார்.


மேலும் அவர் கூறுகையில், “குறித்த மயானம் எமது சபை எல்லைக்குள் அமைந்துள்ள நிலையில், இதனைத் தொடர்ந்தும் ஒரு சாதாரண மயானமாகப் பயன்படுத்தாது, இன அழிப்பின் நினைவகமாகப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது தொடர்பில் மயான சபையினருடன் கலந்துரையாடி, முழுமையான விபரங்களுடன் அடுத்த சபை அமர்வில் இந்த முன்மொழிவை ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றச் சமர்ப்பிப்பேன்” என்றார்.


கடந்த காலங்களில் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில், நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வுகளில், சுமார் 400-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அல்லது அவற்றின் எச்சங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


 



Read More

Previous Post

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளன

Next Post

இளைஞர்களுக்கு குட் நியூஸ்: நாளை அக்கவுண்டில் ஏறும் ரூ. 15,000! பிரதமர் மோடியின் அதிரடித் திட்டம்!

Next Post
இளைஞர்களுக்கு குட் நியூஸ்: நாளை அக்கவுண்டில் ஏறும் ரூ. 15,000! பிரதமர் மோடியின் அதிரடித் திட்டம்!

இளைஞர்களுக்கு குட் நியூஸ்: நாளை அக்கவுண்டில் ஏறும் ரூ. 15,000! பிரதமர் மோடியின் அதிரடித் திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin