தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதலாவது தமிழ் நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று (18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
காலை 10.00 மணிக்கு சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதும், அரசினால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள உரையை ஆளுநர் அர்லேகர் ஆங்கிலத்தில் வாசிப்பார்.
இந்த உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுநரின் உரையைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை சபையில் வாசிப்பார்.
அத்துடன் இன்றைய சபை நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளதுடன், அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழுவுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். விவாதம் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்குவார்.
இந்தக் கூட்டத் தொடரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், மின்வெட்டு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பக் கூடும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது.

