Last Updated:
உலக அளவில் மிகச்சிறந்த சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில், நடப்பாண்டிற்கான ‘ஐகான்’ (ICON) விருதுகளை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்துள்ளது.
செயின்ட் ஹெலினா தீவில் வாழும் 194 வயதான ஆமை, உலகிலேயே மிக வயதான ஆமை என சாதனைப் படைத்துள்ளது.
உலக அளவில் மிகச்சிறந்த சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வகையில், நடப்பாண்டிற்கான ‘ஐகான்’ (ICON) விருதுகளை கின்னஸ் உலக சாதனை அமைப்பு அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க பட்டியலில், செயின்ட் ஹெலினா தீவில் வாழும் 194 வயதான ‘ஜோனாதன்’ என்ற ஆமை, உலகின் மிக வயதான ஆமை என முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்த நேபாளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மலையேற்ற வீரர் ஹரி புதா மகர் (Hari Budha Magar) இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதேபோல், அதிக WWE சாம்பியன் பட்டங்களை வென்ற மல்யுத்த வீரர் ஜான் சீனா (John Cena), யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைத்த கொரிய இசைக்குழு ‘பிளாக் பிங்க்’ (Blackpink) மற்றும் அமெரிக்காவின் முன்னணி பேஸ்பால் வீரர் ஷோஹெய் ஒடானி ஆகியோரும் இந்த விருதை வென்றுள்ளனர்.
இவர்களுடன், விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெண் விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் மற்றும் கடந்த ஆண்டு நைஜீரியாவில் பிரம்மாண்டமான முறையில் சாதனை சமையல் செய்த செஃப் ஹில்டா பாசி ஆகியோரும் இந்த கின்னஸ் ஐகான் பட்டியலில் இடம்பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.


