Last Updated:
அமெரிக்க ராப் பாடகர் கன்யா வெஸ்ட், கடந்த ஆண்டு ஹிட்லரை ஆதரித்து பாடல் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்
அமெரிக்க ராப் பாடகர் கன்யா வெஸ்டின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஜார்ஜியா நாட்டின் திபிலீசி நகரில் உள்ள தினாமோ கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
சுமார் 70 ஆயிரம் பேர் அமரக்கூடிய Dinamo கால்பந்து மைதானத்தின் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை தொடங்கிய 8 மணிநேரத்தில் கடந்த மாதம் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில், பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை கச்சேரியின் கண்கவர் டிரோன் காட்சிகள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அமெரிக்க ராப் பாடகர் கன்யா வெஸ்ட், கடந்த ஆண்டு ஹிட்லரை ஆதரித்து பாடல் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர். கடந்த காலங்களில் யூதர்களுக்கு எதிரான அவரது சர்ச்சை பேச்சுக்களால் இங்கிலாந்து, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Jun 17, 2026 10:31 PM IST
சர்ச்சைகளுக்கு நடுவே… ஜார்ஜியாவில் 70,000 ரசிகர்களை அதிரவைத்த கன்யா வெஸ்டின் இசை நிகழ்ச்சி!

