17 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி முதல் கோலை அடித்த நிலையில், முதல் பாதியில் அர்ஜென்டினா அணி முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியிலும் பந்தை தன்வயப்படுத்திக் கொண்ட மெஸ்ஸி, 60 ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், 76 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலும் அடித்தார். இதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதல் ஹாட்ரிக் கோலை மெஸ்ஸி பதிவு செய்தார்.


