Last Updated:
மாஸ்கோவை நோக்கி வந்த உக்ரைனை சேர்ந்த 60 டிரோன்கள் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே கோடெல்நிகி நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது உக்ரைனின் டிரோன் மோதிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதல் நாளுக்கு நாள் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள Gazprom Neft என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கொழுந்து விட்டு எரிந்தது.
Idag på morgonen har självaste Moskva fått drönarbesök och det enda oljeraffinaderiet i stan bjuder tack vare det nu moskvaborna på spännande lukter och partiklar. Gazpromnefts raffinaderi är även ett landets större med en kapacitet på 10,5 miljoner ton om året. pic.twitter.com/iAj2rsIZlZ
— Fria Ukraina (@FriaUkraina) June 16, 2026
ரஷ்யாவின் 3 ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், நல்வாய்ப்பாக உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என மாஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கோடெல்நிகி நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது உக்ரைனின் டிரோன் மோதிய காணொலி வெளியாகி உள்ளது. இந்நிலையில், மாஸ்கோவை நோக்கி வந்த உக்ரைனை சேர்ந்த 60 டிரோன்கள் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் தெரிவித்துள்ளார்.


