• Login
Wednesday, June 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் – அரசுக்கு பறந்த கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் – அரசுக்கு பறந்த கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள்
மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.


அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்
நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் பதவி உயர்வு

அவர் மேலும் கூறியதாவது, நமது நாட்டின் 15 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக நாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் - அரசுக்கு பறந்த கோரிக்கை | Pensioners Pension And Fixed Deposit Rates


இலவசக் கல்வியின் ஊடாகப் பட்டத்தைப் பெற்ற இவர்கள், தங்களின்
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகச் சேவைப் பிரமாணக் குறிப்பு
உருவாக்கப்படுவதற்கு முன்னரே பணியில் அமர்த்தப்பட்டனர்.


இருப்பினும், இதுவரை அவர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு
உருவாக்கப்படவில்லை.

அரச சேவையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு முறையான
ஆட்சேர்ப்புப் பரீட்சை, சமமான சம்பள அளவு அல்லது பதவி உயர்வு முறைமைகள் கூட
இதுவரையில் உருவாக்கப்படவில்லை.


பட்டத்துக்கு ஏற்ற பதவிகள் இல்லாமை மற்றும் பட்டதாரிகளை விடக் குறைந்த
தகைமைகளைக் கொண்டவர்கள் இவர்களைக் கண்காணிக்கும் அவல நிலை காணப்படுகின்றது.

உரங்களுக்கான மானிய விலை

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இவர்களின் பெயர் ‘சமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர்’ என மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இந்த அநீதிக்கு எதிராக
ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என்பதுடன், அடுத்த வாரம்
நாடாளுமன்றத்தில் இது குறித்து அவதானத்தைத் திருப்புவேன்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான 15% வட்டி வீதம் - அரசுக்கு பறந்த கோரிக்கை | Pensioners Pension And Fixed Deposit Rates

சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களின் 10 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபா
வரையான சேமிப்புகளுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம்
தற்போது பறிக்கப்பட்டுள்ளது.



விவசாயிகளின் விதை மற்றும் உரங்களுக்கான மானிய விலை மற்றும் உத்தரவாத விலைகள்
இன்னும் வழங்கப்படவில்லை.

இதனால் ஒவ்வொரு விவசாயியும் கடுமையான
நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

மீனவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வளங்களும் சலுகைகளும் தற்போதைய அரசால்
பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

DECODE | Qatar PM: Master of Diplomacy | நெதன்யாகுவின் கனவை உடைத்த கத்தார் | Iran | US

Next Post

இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! | PM Modi’s Mega Show at G7!: India’s Prime Minister Speaks for Entire South Asian Region on World Stage

Next Post
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! | PM Modi’s Mega Show at G7!: India’s Prime Minister Speaks for Entire South Asian Region on World Stage

இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! | PM Modi's Mega Show at G7!: India's Prime Minister Speaks for Entire South Asian Region on World Stage

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin