சீனாவின் வடமேற்கே அமைந்துள்ள ஹைக்சி மங்கோலியன் மாகாணத்தில், செவ்வாய்க்கிழமை (16) மாலை 5.06 மணியளவில் கடும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக, சீன நிலநடுக்க வலைப்பின்னல் மையம் (China Earthquake Networks Center) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மாலை 6.10 மணியளவில் நிலநடுக்க பேரிடருக்கான அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, அந்தப் பகுதியில் அமைந்திருந்த நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்த அனர்த்தத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்; மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும், மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்கும் அவசர மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


