Last Updated:
அயாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண். இவரது கணவர் வேறு நகரத்தில் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வந்தார். வீட்டில் தனியாக இருந்த அந்த பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து அவரது பள்ளி நண்பன் அயாஸ் தாஜ் மதாரே என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பி கடந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ஒரு ஹோட்டலில் அவரை சந்தித்தார்.
அப்போது அயாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த அந்த பெண் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். அதன்பின்தான் அயாஸ் தனது கொடூர செயலை அரங்கேற்றியிருக்கிறார். மயக்கத்திலிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக கூறி மிரட்டி கடந்த சில மாதங்களில் அந்தப் பெண்ணிடம் இருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் வரை பறித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் தனது நண்பர்ளையும் அயாஸ் கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். கடந்த மே 31 அன்று, அயாஸ் மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கல்மேஷ்வர் பகுதிக்குக் கடத்திச் சென்று, அயாசுடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. நடந்ததை தாமதமாக அறிந்து பெண்ணின் கணவர் கடந்த ஜூன் 14 அன்று இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முதன்மைக் குற்றவாளி அயாஸ் மற்றும் அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இந்த திருமணத்தை நடத்தி வைத்த மௌலானா என்பவரை தேடும் பணியையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானப்படை அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. என்ன நடந்தது?


