இலங்கையில் இன்றைய தினம் (16) தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 2,000 ரூபாயால் அதிகரித்து 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 4,000 ரூபாயால் அதிகரித்து 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை நிலவரம்
இந்தநிலையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,313 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை உலக சந்தையில் தங்கம், மற்றும் வெள்ளியின் விலை நேற்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்திருந்த நிலையில் இலங்கையிலும் தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

