Last Updated:
மேற்குவங்க தொடக்கப்பள்ளி ஆசிரியர் லஞ்ச வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை அமலாக்கத்துறை கொல்கத்தாவில் 10 மணி நேரம் விசாரித்தது
வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதை அடுத்து, அக்கட்சி தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், மேற்குவங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்களின் போலி கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியிடம் சிபிசிஐடி சிறப்பு விசாரணைக் குழு நேற்று முன்தினம் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது.
இந்நிலையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணியளவில் அபிஷேக் பானர்ஜி நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி கேள்விகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
Jun 16, 2026 11:15 AM IST


