• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் டீசல் விலை உயர்கிறதா? – டீசல் மீதான வரியை மாற்றியமைத்த அரசு!! | India Hikes Diesel & ATF Export Duty to ₹14/₹12.5 per Litre: Domestic Fuel Prices Unchanged from June 16

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் டீசல் விலை உயர்கிறதா? – டீசல் மீதான வரியை மாற்றியமைத்த அரசு!! | India Hikes Diesel & ATF Export Duty to ₹14/₹12.5 per Litre: Domestic Fuel Prices Unchanged from June 16
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் டீசல் விலை உயர்கிறதா? – டீசல் மீதான வரியை மாற்றியமைத்த அரசு!!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான ‘விண்ட்ஃபால்’ (Windfall) வரியை திடீரென உயர்த்தி உள்ளது. அதே வேளையில் பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ. 13.5-லிருந்து ரூ. 14-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 9.5-லிருந்து ரூ. 12.5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ. 1.5 என்ற அளவில் மாற்றமின்றி தொடர்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மத்திய அரசு அவ்வப்போது இந்த வரியை மாற்றி வருகிறது.

இந்தியாவில் டீசல் விலை உயர்கிறதா? - டீசல் மீதான வரியை மாற்றியமைத்த அரசு!!

பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கியது. இதனை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவின் முன்னணி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெயை சுத்திகரித்து, வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்க்க முயல்கின்றன. இதனை தடுக்கவே மார்ச் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு இந்த வரியை மாற்றி அமைத்து வருகிறது.

நல்ல லாபம் கிடைப்பதால் தனியார் நிறுவனங்கள் லாப நோக்கில் மொத்த எரிபொருளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டால் இந்தியாவிற்குள் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்றுமதி வரியை உயர்த்தும்போது, நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு விற்பதை விட உள்நாட்டில் விற்பதே லாபகரமாகத் தோன்றும். இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு சிக்கல் ஏற்படாது.

அரசின் இந்த ஏற்றுமதி வரி உயர்வால் சாதாரண மக்களுக்கு தொடர்ந்து பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். உள்நாட்டுச் சந்தையில் விற்கப்படும் பெட்ரோல், டீசலுக்கான வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலில் உள்நாட்டில் பெட்ரோல் , டீசல் மற்றும் விமான எரிபொருள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு இவற்றுக்கான ஏற்றுமதி வரியை மாற்றி வருகிறது. இதனால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. சென்னையை பொருத்தவரை இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 107. 87 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 99.6 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜி 2 ரூபாய் விலை உயர்ந்து 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Share This Article

English summary

India Hikes Diesel & ATF Export Duty to ₹14/₹12.5 per Litre: Domestic Fuel Prices Unchanged from June 16

டீசல் விலை உயர்கிறதா? – டீசல் , விமான எரிபொருள் மீதான வரியை மாற்றியமைத்த அரசு!!- The Indian government has increased the windfall tax (export duty) on diesel to ₹14 per litre and aviation turbine fuel (ATF) to ₹12.5 per litre starting June 16, 2026, while keeping petrol export duty unchanged at ₹1.5 per litre. Domestic retail fuel prices for petrol and diesel remain unaffected.

Story first published: Tuesday, June 16, 2026, 8:15 [IST]

Other articles published on Jun 16, 2026

Read More

Previous Post

பணம் கேட்டு மிரட்டுகிறார் ராம.ரவிக்குமார்.. எஸ்பி அலுவலகத்தில் மாஜி அறங்காவலர் பரபர புகார்! பின்னணி? | Complaint Against Rama Ravikumar Sparks Fresh Controversy in Dindigul

Next Post

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்: ரூ.95,000 கோடியைத் திருப்பித் தருகிறது அமெரிக்க அரசு! | US government has initiated a process to refund taxes collected by the Trump administration

Next Post
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்: ரூ.95,000 கோடியைத் திருப்பித் தருகிறது அமெரிக்க அரசு! | US government has initiated a process to refund taxes collected by the Trump administration

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்: ரூ.95,000 கோடியைத் திருப்பித் தருகிறது அமெரிக்க அரசு! | US government has initiated a process to refund taxes collected by the Trump administration

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin