• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..! கிடு கிடு என உயரும் தங்கம் விலை..! இன்று ஒரு கிராம் Gold Rate என்ன? | Trump Iran peace shock: Gold prices surge in Chennai — Today’s 22ct gold rate per gram up ₹210

GenevaTimes by GenevaTimes
June 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..! கிடு கிடு என உயரும் தங்கம் விலை..! இன்று ஒரு கிராம் Gold Rate என்ன? | Trump Iran peace shock: Gold prices surge in Chennai — Today’s 22ct gold rate per gram up ₹210
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..! கிடு கிடு என உயரும் தங்கம் விலை..! இன்று ஒரு கிராம் Gold Rate என்ன?

சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஈரான் போர் முடிவுக்கு வருவதாகவும் வரும் வெள்ளிக்கிழமை ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அவருடைய இந்த அறிவிப்பை அடுத்து உலக சந்தையே தலைகீழாக மாறி இருக்கிறது.

இத்தனை நாட்களாக தினம்தோறும் விலை உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து இருக்கிறது , தினம்தோறும் சரிவடைந்து வந்த தங்கத்தின் விலை உயர தொடங்கி இருக்கிறது . டிரம்பின் ஈரான் அமைதி ஒப்பந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து உலக சந்தையில் தங்கத்தின் விலை இரண்டு சதவீதத்திற்கும் மேல் உயர்வு கண்டது. இது தான் இந்திய சந்தையிலும் இன்று எதிரொலித்திருக்கிறது.

டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!  கிடு கிடு என உயரும் தங்கம் விலை..! இன்று ஒரு கிராம் Gold Rate என்ன?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 210 ரூபாய் விலை உயர்ந்து 14,070 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 1680 ரூபாய் விலை உயர்ந்து 1,12,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,40,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையை பொருத்தவரை ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ச்சியாக சரிவடைந்து வந்த தங்கம் கடந்த மூன்று நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து 13,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சனிக்கிழமை அன்று 60 ரூபாய் விலை உயர்ந்து 13 ,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. மூன்று வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 570 ரூபாயும் ஒரு சவரனுக்கு 4560 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.

24 கேரட் சுத்த தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 229 ரூபாய் விலை உயர்ந்து 15,349 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1,53,490 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் 94 ,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் விலை உயர்ந்து 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாயும் ஒரு கிலோ 20 ஆயிரம் ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.

ஈரான் போர் நிறுத்தம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்துள்ளன. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தை நோக்கி திருப்பி விட்டிருக்கிறார்கள் இதனால் தங்கம் டிமாண்ட் அதிகரித்து அதன் விலை உயர்ந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை ஈரான் அமெரிக்கா ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தங்கத்தின் விலை உயர்வு இன்னும் வேகம் எடுக்கும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Trump Iran peace shock: Gold prices surge in Chennai — Today’s 22ct gold rate per gram up ₹210

டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..! கிடு கிடு என உயரும் தங்கம் விலை..! இன்று ஒரு கிராம் Gold Rate என்ன?- Following President Trump’s sudden Iran peace announcement, global markets flipped and Chennai gold rates jumped sharply — 22K jewelry gold at ₹14,070/gram today, silver ₹280/gram.

Story first published: Monday, June 15, 2026, 10:31 [IST]

Other articles published on Jun 15, 2026

Read More

Previous Post

தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! | TVK Internal Rift: District Secretaries Vs MLAs Power Struggle Explained In Vijay’s Party (2026)

Next Post

சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி | Makkal Osai

Next Post
சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி | Makkal Osai

சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin