மொத்தம் 7 வகையான சாதாரண அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சாதாரண அரசு பேருந்துகள், நகர பேருந்துகள், நிறுத்தங்கள் வரையறுக்கப்பட்ட சாதாரண அரசு பேருந்துகள், டவுன் டூ டவுன் பேருந்துகள், பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகள் உள்ளிட்டவற்றில் இந்த சேவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


