Last Updated:
கேமிங், Live Streaming மற்றும் அறியாத நபர்களுடன் உரையாடுவது உள்ளிட்ட அம்சங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சிறுவர்களின் மனநலம், உடல்நலம் மற்றும் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Instagram, Facebook, X, Snapchat, TikTok, YouTube உள்ளிட்ட முன்னணி சமூக ஊடகங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கேமிங், Live Streaming மற்றும் அறியாத நபர்களுடன் உரையாடுவது உள்ளிட்ட அம்சங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இதற்கான புதிய மசோதா நடப்பாண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே இந்தத் தடையைக் கொண்டு வந்த நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது பிரிட்டனும் இணைந்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை… அதிரடி உத்தரவிட்ட பிரிட்டன் அரசு!


