• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? | How does Google Maps trick you into thinking 6400km Russia is longer than 7200km Africa?

GenevaTimes by GenevaTimes
June 15, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? | How does Google Maps trick you into thinking 6400km Russia is longer than 7200km Africa?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Velmurugan P

Time
Published: Monday, June 15, 2026, 17:36 [IST]

மாஸ்கோ: நாம சின்ன வயதில் இருந்து ஸ்கூல் புக்கில், ஆபீஸ் சுவர்களில் எனப் பல இடங்கள்ல ஒரு உலக வரைபடத்தைப் பார்த்திருப்போம். அதுல ரஷ்யா மிகப்பெரிய அளவிலும், ஆப்பிரிக்கா ஏதோ ஒரு நடுத்தரமான அளவுள்ள கண்டம் போலவும் காட்சியளிக்கும். ஆனால், நிஜம் என்ன தெரியுமா? நாம இத்தனை காலமா பார்த்துட்டு இருக்கிற வரைபடம் ஒரு மாயை! நீளமான ரஷ்யா 6,400 கிலோமீட்டர் தான் என்று ஆப்பிரிக்கா 7200 என்றும் கூறுவார்கள். ஆனால் இதில் ஒளிந்துள்ள உண்மை என்ன என்பது பலருக்கும் தெரியாது. அதனை அறிவியல்பூர்வமாகவும், அடங்கி உள்ள பொய்யை பற்றியும் பார்ப்போம்.

சமீபத்துல சமூக வலைத்தளங்கள்ல பயங்கர வைரலாகிட்டு இருக்கிற ஒரு வரைபடத்தை பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். செய்தியில் இணைக்கப்பட்ட புகைப்படத்தில் உலக வரைப்படத்தின் குறிப்பிட்ட நீளத்தில் ரெண்டு சிவப்பு நிறக் கோடுகள் வரைஞ்சிருக்கும், கவனிச்சீங்களா?

How does Google Maps trick you into thinking 6400km Russia is longer than 7200km Africa

மேல இருக்கிற கோடு ரஷ்யா.. பார்க்குறதுக்கு உலக வரைபடத்துல பாதி தூரத்தை அடைச்ச மாதிரி ரொம்ப நீளமா தெரியுது. ஆனால், அதோட உண்மையான நீளம் வெறும் 6,400 கிலோமீட்டர் தான்.

கீழ இருக்கிற கோடு (ஆப்பிரிக்கா – டக்கார் டூ மொகடிஷு): கண்ணுக்கு ரொம்பச் சின்ன கோடு மாதிரி தெரியுது இல்ல? ஆனா, இதோட நிஜமான நீளம் 7,200 கிலோமீட்டர்.

என்ன பாஸ் குழம்புதா? “பார்க்கப் பெருசா இருக்கிற கோடு சின்ன தூரம், பார்க்கச் சின்னதா இருக்கிற கோடு பெரிய தூரமா?” இதுதான் வரைபட உலகத்தின் மிகப்பெரிய தகிடுதத்தம் தான்..

பின்னால் இருக்கும் சதி என்ன? (மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷன்)

இப்படி நம்ம கண்ணை ஏமாத்துற வரைபட முறைக்கு “மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷன்” என்று பெயர். 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்ற வரைபட நிபுணர், கடல் பயணம் செய்றவங்களுக்கு திசைகள் மாறாமல் இருக்கணும் அப்படிங்கிறதுக்காக இந்த மேப்பை உருவாக்கினார்.

வாஷிங்டனில் பரபரப்பு: அமெரிக்காவில் ₹95 ஆயிரம்.. இந்தியாவில் வெறும் ₹950.. ஆச்சரியத்தில் உறைந்த பெண்

வாஷிங்டனில் பரபரப்பு: அமெரிக்காவில் ₹95 ஆயிரம்.. இந்தியாவில் வெறும் ₹950.. ஆச்சரியத்தில் உறைந்த பெண்

பூமி உருண்டையாக இருக்கிறது. அதை ஒரு தட்டையான பேப்பர்ல கொண்டு வரும்போது சில குளறுபடிகள் நடக்கும். இந்த மெர்கேட்டர் மேப்ல, பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகள் அதன் உண்மையான அளவில் இருக்கும். ஆனால், பூமத்திய ரேகையை விட்டுத் தள்ளி மேலே (வடக்கு நோக்கி) போகப் போக, நிலப்பரப்புகள் ரப்பர் பேண்ட் மாதிரி இழுக்கப்பட்டுப் பெருசாத் தெரியும்.

அதனால்தான், அதிக உயரமான அட்சரேகையில் இருக்கும் ரஷ்யா மற்றும் ஐரோப்பியப் பகுதிகள் நிஜத்தை விடப் பூதாகரமாகக் காட்சி தருகின்றன.

ஆப்பிரிக்கா பற்றிய ‘டாப் 3’ பொய்கள்!

இந்தத் தவறான வரைபடத்தால் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பற்றி உலக மக்கள் மனசுல பல பொய்கள் பதிஞ்சு போயிருக்கிறது.

கிரீன்லாந்து vs ஆப்பிரிக்கா பொய்: மேப்ல பார்த்தால் கிரீன்லாந்து தீவும் ஆப்பிரிக்காவும் ஒரே அளவுல இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா உண்மை என்னன்னா, ஆப்பிரிக்கா கண்டம் கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது!

ரஷ்யா vs ஆப்பிரிக்கா பொய்: வரைபடத்தில் ரஷ்யா ஆப்பிரிக்காவை விடப் பெரியது போலத் தோன்றும். ஆனால் நிஜத்தில், ஆப்பிரிக்காவின் பரப்பளவு (30.3 மில்லியன் சதுர கி.மீ), ரஷ்யாவை விட (17.1 மில்லியன் சதுர கி.மீ) கிட்டத்தட்ட இருமடங்கு பெரியது ஆகும்.

ஒட்டுமொத்த உலகத்தையும் விழுங்கும் ஆப்பிரிக்கா: நிஜமான உலக அளவில் பார்த்தால் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய அத்தனை நாடுகளையும் ஒன்றாக இணைத்தாலும், ஆப்பிரிக்கக் கண்டத்துக்குள் அடக்கிவிடலாம்! அந்தளவுக்கு அது பிரம்மாண்டமானது.

“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!

“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!

அப்போ எதுதான் நிஜம்?

தட்டையான உலக வரைபடங்கள் எப்பவுமே ஏதோ ஒரு விஷயத்துல நம்மை ஏமாத்தத்தான் செய்யும் (வடிவம், அளவு அல்லது தூரம்). நாடுகளின் உண்மையான அளவையும், தூரத்தையும் துல்லியமா தெரிஞ்சுக்க ஒரே வழி… நம் வீட்டு மேஜை மேல் இருக்கும் ‘குளோப்’ (Globe) எனப்படும் உலக உருண்டைதான்! இனிமே மேப்பைப் பார்த்துட்டு எந்த நாடு பெரியதுன்னு தப்பா எடை போட்டுறாதீங்க பாஸ்!

வரைபடம் இப்படித் தவறான அளவில் இருப்பதற்குப் பின்னால் ஒரு மிகச்சிறந்த கணிதவியல் மற்றும் அறிவியல் காரணமும், அதே நேரத்தில் அன்றைய காலகட்டத்தின் அரசியல்-வணிகத் தேவைகளும் கலந்திருக்கின்றன.

அறிவியல் பூர்வமான காரணம்: பூசணிக்காயைத் தட்டையாக்க முடியுமா?

பூமி என்பது ஒரு முப்பரிமாண உருண்டை வடிவம். ஆனால், நாம் பயன்படுத்தும் வரைபடம் ஒரு இருபரிமாண தட்டையான காகிதம். ஒரு முழு ஆரஞ்சுப் பழத்தின் தோலை உரிக்காமல் அப்படியே தட்டையான பேப்பராக மாற்ற முடியுமா? நிச்சயம் முடியாது. ஆங்காங்கே கிழிந்து போகும் அல்லது சுருக்கங்கள் விழும். இதே கணக்குதான் உலக வரைபடத்திற்கும் பொருந்தும். கோள வடிவில் இருக்கும் பூமியைத் தட்டையான காகிதத்தில் வரையும்போது, வடிவத்தையோ அல்லது அளவையோ ஏதேனும் ஒன்றை நாம் தியாகம் செய்ய வேண்டும்.

1569 இல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்ற கணிதவியலாளர் வடிவத்தையும், திசையையும் துல்லியமாக வைக்க முடிவு செய்தார். அதற்காக அவர் கையாண்ட கணித உத்திதான் “மெர்கேட்டர் ப்ரொஜெக்ஷன்”. இதில் பூமியின் அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கணித முறைப்படி மேல்நோக்கிப் போகப்போகக் கூட்டினார். இதனால் நாடுகள் அகலமாக இழுக்கப்பட்டுப் பெரிதாகத் தெரிந்தாலும், திசைகள் 100% துல்லியமாக மாறாமல் நேர்க்கோட்டில் அமைந்தன.

கப்பல்கள் வழிதவறக் கூடாது என்ற காரணம் நிஜமா?

ஆம், இது முற்றிலும் உண்மை. மெர்கேட்டர் இந்த வரைபடத்தை உருவாக்கியதே மாலுமிகளுக்காகத்தான் . அக்காலத்தில் திசைகாட்டி மட்டுமே கப்பல் பயணங்களுக்குத் துணையாக இருந்தது. மெர்கேட்டர் வரைபடத்தில் ஏதேனும் இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு நேர்க்கோடு வரைந்தால், அது காட்டும் கோணம் (Bearing) திசைகாட்டியில் காட்டும் கோணத்துடன் கச்சிதமாகப் பொருந்தும்.

மாலுமிகள் வரைபடத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைந்து, அதே திசையில் கப்பலைச் செலுத்தினால், தூரம் அதிகமாகத் தெரிந்தாலும் வழிதவறாமல் நினைத்த இடத்தை அடைந்துவிட முடியும். கடலில் தூரத்தை விடத் திசைதான் மிக முக்கியம் என்பதால், இந்த அறிவியல் உத்தி உலகையே மாற்றியது.

இங்கிலாந்து (மற்றும் ஐரோப்பிய நாடுகள்) இதை ஏன் ஏற்றுக்கொண்டது?

இங்கிலாந்து இந்த வரைபட முறையை ஆவலோடு ஏற்றுக்கொண்டதற்குக் கடல் வணிகம், அரசியல் மற்றும் காலனியாதிக்க மனநிலை என மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன: 17 மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் பேரரசு உலகம் முழுவதும் தனது கப்பற்படையை அனுப்பி நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு வழிதவறாமல் பயணிக்க ஒரு துல்லியமான கடல் வரைபடம் தேவைப்பட்டது. மெர்கேட்டர் வரைபடம் அதற்குப் கச்சிதமாக உதவியது.

இந்த வரைபடத்தில் பூமியின் மையப்பகுதியாக ஐரோப்பா காட்சியளித்தது. மேலும், வடக்கு அரைக்கோளத்தில் இருந்த இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் அவற்றின் உண்மையான அளவை விடப் பிரம்மாண்டமாகத் தெரிந்தன. “நாங்கள் உலக வரைபடத்திலேயே இவ்வளவு பெரிய நாடாக இருக்கிறோம், எனவே உலகை ஆள எங்களுக்குத் தகுதி இருக்கிறது” என்ற காலனியாதிக்கச் சிந்தனையை மற்ற நாடுகள் மத்தியில் விதைக்க இந்த வரைபடம் மறைமுகமாக உதவியது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள் இதில் சிறியதாகக் காட்டப்பட்டதும் அவர்களின் அரசியல் லாபத்திற்குச் சாதகமாக அமைந்தது.

English summary

Google Maps uses Mercator projection, which distorts landmass size. It stretches areas farther from the equator, making Russia (6400km) look larger and Africa’s longer 7200km line look short

Read More

Previous Post

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியாவின் 2026 முதலாம் காலாண்டு பொருளாதாரம் 5.4% ஆக வளர்ச்சி – அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா பெருமிதம்! | Makkal Osai

Next Post

அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் விலை உயர்வு: உங்கள் மாத பட்ஜெட்டில் இடி விழப்போகிறதா? | Forex, Fuel, And Fertilizer Price Hike 2026: Impact On Your Monthly Budget And EMI Explained

Next Post
அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் விலை உயர்வு: உங்கள் மாத பட்ஜெட்டில் இடி விழப்போகிறதா? | Forex, Fuel, And Fertilizer Price Hike 2026: Impact On Your Monthly Budget And EMI Explained

அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் விலை உயர்வு: உங்கள் மாத பட்ஜெட்டில் இடி விழப்போகிறதா? | Forex, Fuel, And Fertilizer Price Hike 2026: Impact On Your Monthly Budget And EMI Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin