உலகம் முழுவதும் அறியப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளவர் ரத்தன் டாடா. அவருக்கு ரூ.3,800 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. ரத்தன் டாடாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரம்பரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். டாடாவின் குடும்ப உறுப்பினர்கள் அவ்வப்போது ஊடகங்கள் முன்பு தோன்றுவதும், அவர்களை குறித்த செய்திகளும் வெளிவரும்.
ஆனால் ரத்தன் டாடாவின் தம்பி ஜிம்மி டாடாவை யாரும் பார்த்திருக்க முடியாது. ரத்தன் டாடாவை போல் இல்லாமல், ஜிம்மி டாடா சற்று கூச்ச சுபாவம் உடையவர். அவருக்கு ஊடகங்கள் முன்பு தோன்றுவது விருப்பமில்லாத ஒன்று. பெரும்பாலும் தனிமையான வாழ்க்கை வாழ்வதையே அவர் விரும்புகிறார்.
ரத்தன் டாடாவுக்கும் ஜிம்மி டாடாவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக ரத்தன் டாடா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1945 ஆம் ஆண்டு தனது தம்பி ஜிம்மி டாடாவுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு புறம் குடும்ப பாரம்பரியத்தை காக்க, தொழில்களுக்கு ரத்தன் டாடா பொறுப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், அவரது தம்பி ஜிம்மி டாடா எளிமையான வாழ்க்கையை விரும்பினார். கோடி கணக்கில் சொத்து இருப்பினும் ஜிம்மி டாடா எளிமையாக வாழ்வதையே விரும்பினார். அதன் காரணமாக அவர் தற்போது 2BHK அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க : ஒரே நாளில் 10,225 கோடி ரூபாயை இழந்த இந்தியாவின் பணக்கார பேங்கர்!
தொழிலில் ஈடுபட விரும்பாத ஜிம்மி டாடா, சிறிய வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமன்றி அவர் மொபைல் போன் பயன்படுத்துவது கிடையாதாம். அன்றாட நிகழ்வுகள், செய்திகளை செய்தித்தாள் மூலம் அவர் அறிந்துக்கொள்கிறார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
