பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்கு பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவர், வௌளிக்கிழமை(12) இரவு முதல் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காணாமல் போன குறித்த சிறுவனின் சடலம் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


