• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பத்தின கவலையே இனி வேண்டாம்!! வந்துவிட்டது ஆய்வக தங்கம் (lab gold)!! | Lab-Grown Gold vs Mined Gold: Real Price, Purity & Investment Value Differences in 2026

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தங்கம் விலை பத்தின கவலையே இனி வேண்டாம்!! வந்துவிட்டது ஆய்வக தங்கம் (lab gold)!! | Lab-Grown Gold vs Mined Gold: Real Price, Purity & Investment Value Differences in 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை பத்தின கவலையே இனி வேண்டாம்!! வந்துவிட்டது ஆய்வக தங்கம் (lab gold)!!

தங்கம் தான் உலகம் முழுவதுமே பேசு பொருளாக இருக்கிறது. பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி சிறு சிறு நாடுகள் வரை தங்களுடைய பொருளாதார வலிமையை எடுத்துரைக்க தங்கத்தை தான் முக்கிய ஆதாரமாக பயன்படுத்துகின்றன. சாதாரண குடும்பங்களும் இதே மனநிலை தான். தங்கத்தை தங்களுடைய ஒரு குடும்ப அந்தஸ்தாக பார்க்கின்றன.

இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்படக்கூடிய சிறிய சிறிய மாற்றம் கூட நேரடியாக கோடிக்கணக்கான மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுகிறதா இறங்குகிறதா என்ற செய்தி தலைப்புச் செய்தி ஆவதற்கு காரணமும் இதுதான். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய் விலையை கடந்து 1 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வரை உச்சத்தையும் எட்டியது.

தங்கம் விலை பத்தின கவலையே இனி வேண்டாம்!! வந்துவிட்டது ஆய்வக தங்கம் (lab gold)!!

தற்போது தங்கத்தின் விலை ஒரு நாள் ஏறுவது ஒரு நாள் இறங்குவது என நிலையற்று காணப்படுகிறது. உலக அளவில் தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு குறைவாகவும் அதற்கான டிமாண்ட் அதிகமாகவும் இருப்பதே தங்கம் விலை இவ்வளவு செல்வாக்குடன் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் இனிவரும் காலங்களில் அதைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. ஏனெனில் தற்போது ஆய்வகங்களிலேயே தங்கத்தை உருவாக்க தொடங்கி விட்டார்கள்.

ஆய்வகத்தில் எப்படி வைரம் உருவாக்கப்பட்டதோ அதே போல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் உருவாக்கப்படும் தங்கம் தான் “ஆய்வக தங்கம்”. இது தங்க முலாம் பூசப்பட்ட (Gold-plated) அல்லது கவரிங் நகை போல போலி கிடையாது. வேதியியல் ரீதியாக (Chemically), சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தங்கமும் இதுவும் ஒன்றுதான். இதன் அடர்த்தி , உருகுநிலை மற்றும் தரம் எல்லாமே அசல் தங்கத்தை போலவே இருக்கும். ஆனால், இது இன்னும் வணிக ரீதியாக மிக அதிக அளவில் சந்தைக்கு வரவில்லை.

தங்கம் விலை பத்தின கவலையே இனி வேண்டாம்!! வந்துவிட்டது ஆய்வக தங்கம் (lab gold)!!

பொதுவாக ஆய்வக வைரம் இயற்கையான வைரத்தை விட மிக மலிவாக இருக்கும். ஆனால் தங்கத்தில் அப்படி இல்லை. ஆய்வக தங்கம் இயற்கை தங்கத்தை விட விலை குறைவாக இருக்காது. அதற்கு சமமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இதை ஆய்வகத்தில் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப செலவு மிகவும் அதிகம். மேலும், இயற்கை தங்கத்தைப் போலவே இதற்கும் சுத்திகரிப்பு, தரச்சான்றிதழ் மற்றும் பிற உலோகங்களை கலக்கும் செலவுகள் ஏற்படுகின்றன.

பூமிக்கு அடியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் தங்கத்தை போலவே ஆய்வக தங்கத்தையும் 24 கேரட் (99.9% தூய்மை) வரை தயாரிக்க முடியும். இதையும் 18 கேரட், 14 கேரட் நகைகளாக மாற்றலாம். இதன் உறுதித்தன்மை, மங்காமல் இருக்கும் தன்மை எல்லாமே இயற்கை தங்கத்திற்கு நிகரானது. ஹால்மார்க் முத்திரை பெற்றுவிட்டால், இரண்டிற்கும் தரத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

இயற்கையான தங்கத்தை பொறுத்தவரை உலகளவில் மிக வலுவான மறுவிற்பனை சந்தை உள்ளது. எந்தவொரு அடகு கடையிலோ அல்லது நகைக் கடையிலோ இதை உடனே விற்று பணமாக்க முடியும். ஆய்வக தங்கம் விற்க முடியும் என்றாலும், சந்தையில் இதற்கான பொதுவான அங்கீகாரமும், சான்றிதழ் முறைகளும் இன்னும் முழுமையாக நிலைபெறவில்லை. அதனால் ஆரம்பக் காலத்தில் இதை மறுவிற்பனை செய்யும்போது கடைகளில் சில தயக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளது. விரைவில் சந்தைகளில் ஆய்வக தங்கம் அதிகமாக புழக்கத்திற்கு வரும் என சொல்லப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Lab-Grown Gold vs Mined Gold: Real Price, Purity & Investment Value Differences in 2026

Lab-grown gold is chemically and physically identical to mined gold—sharing the same atomic structure, density, purity (karat levels), and appearance. The key difference lies in production: lab-grown gold is created atom-by-ion in controlled laboratory conditions using chemical/electrochemical processes, while mined gold is extracted from Earth.

Story first published: Sunday, June 14, 2026, 8:00 [IST]

Other articles published on Jun 14, 2026

Read More

Previous Post

மமதாவின் கோட்டை தகர்கிறதா? அதிருப்தி எம்பிக்கள் எடுத்த அதிரடி முடிவு! | TMC Political Crisis 2026: 20 Dissident MPs Join NCPI To Align With NDA, Mamata Fights Back

Next Post

நாங்கள் அகதிக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை மட்டுமே வழங்கி வருகிறோம் என்கிறார் ரோஹிங்கியா பள்ளியின் ஆசிரியர் | Makkal Osai

Next Post
நாங்கள் அகதிக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை மட்டுமே வழங்கி வருகிறோம் என்கிறார் ரோஹிங்கியா பள்ளியின் ஆசிரியர் | Makkal Osai

நாங்கள் அகதிக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை மட்டுமே வழங்கி வருகிறோம் என்கிறார் ரோஹிங்கியா பள்ளியின் ஆசிரியர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin