Last Updated:
வரும் நாட்களில் முட்டை விலை மேலும் மீண்டும் உயரம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதில் ஒரு முட்டை கொள்முதல் விலை ₹ 6:20 இருந்த விலை 10 காசு உயர்ந்து ₹6:30 ஆக நிர்ணயிக்கப்பட்டு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்தது.
கடந்த மூன்று தினங்களாக 10 காசு வீதத்தில் 30 காசு உயர்ந்திருந்த நிலையில் தொடர்ந்து மீண்டும் இன்று 10 காசு உயர்ந்து உள்ளது, விலை உயர்வுக்கு காரணம்,கேரளா மாநிலத்தில் மீன் பிடி தடைக்காலம் உள்ளதாலும்,கோழி தீவனப்பொருள் விலை அதிகரித்து உள்ள காரணத்தினாலும், பள்ளிகருக்கு சத்துணவு முட்டை அதிக அளவில் செல்கிறது.
உற்பத்தி குறைவு என்பதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை குறைவு, உற்பத்தி குறைவு தேவை அதிகரிப்பு,செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலையை இன்றும் 10 காசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் முட்டை விலை மேலும் மீண்டும் உயரம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Jun 14, 2026 10:31 PM IST


