கடந்த காலங்களில் நடந்தேறிய “எல் – நினோ” என்ற அசாதாரண காலநிலை பேரழிவு உலகினைச் சிந்திக்க வைத்துள்ளது. கடும் வரட்சி, வெள்ளப் பெருக்கு, மற்றும் வனப் பாதிப்பு எனப் பல பேரழிவுகளை ஏற்படுத்தும் இந்த எல்-நினோ, உலக மக்களின் உணவு அரசியலிலும், விவசாயச் சந்தையிலும் பாரிய மாற்றங்களைச் செய்துள்ளது.

