• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

40 மீட்டர் உயரம்.. பஞ்சி ஜம்பிங் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
40 மீட்டர் உயரம்.. பஞ்சி ஜம்பிங் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 14, 2026 6:08 PM IST

பிரபலமான பஞ்சி ஜம்ப் எனும் உயர குதிப்பு சாகசத்தில் ஈடுபட மரியா முடிவெடுத்துள்ளார்.

பஞ்சி ஜம்பிங் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பஞ்சி ஜம்பிங் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

பிரேசிலில் பஞ்சி ஜம்பிங் எனும் சாகச விளையாட்டில் பாதுகாப்பு கயிறு கட்டாமல் உயரமான பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்ட 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் உடற்கல்வி பட்டதாரிப் பெண்ணான மரியா எடுவார்டா ரோட்ரிக்ஸ் டி ஃப்ரீடாஸ். 21 வயதான இவர் பிரேசிலின் லிமெய்ரா நகரில் உள்ள சாகச விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்ற “போன்டே டோ எஸ்கெலெட்டோ” என்றழைக்கப்படும் இடத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மிகவும் பிரபலமான பஞ்சி ஜம்ப் எனும் உயர குதிப்பு சாகசத்தில் ஈடுபட மரியா முடிவெடுத்துள்ளார்.

அதன்படி பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயரமான மேடையில் இருந்து சுமார் 40 மீட்டர் கீழே தூக்கி வீசப்படும் பஞ்சி ஜம்ப் சாகத்தில் கிடைக்கும் திரிலிங் அனுபவத்தை பெற மரியா தயாரானார். ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் அலட்சியத்தால் மரியா இன்று உயிரோடே இல்லை. சம்பவத்தன்று பணியில் இருந்த ஊழியர்கள் இருவர் மரியாவின் உடலில் பாதுகாப்பு ரோப்களை கட்டாமல் மறந்து அசால்ட்டாக விட்டுள்ளார்.

அதன் விளைவாக 40 மீட்டர் ஆழத்தில் தூக்கி வீசப்பட்ட மரியா நேராக தரையில் மோதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாகசகம் செய்து அதை இன்ஸ்டாவில் அப்லோடு செய்ய வீடியோ எடுக்கச் சொல்லி விட்டுக் குதிக்கச் சென்றவருக்கு அதுவே கடைசி வீடியோவாக மாறியது. அவ்வளவு உயரத்தில் இருந்து ஒரு பெண்ணை தூக்கி கீழே வீசுகிறோம் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று பார்க்காமல் மரியாவை பஞ்சி ஜம்ப் ஊழியர்கள் காவு வாங்கி உள்ளனர்.

பிரேசிலில் Bungee jump-ன் போது பாதுகாப்பு கயிறு கட்டாமல், 40 அடி உயர பாலத்தில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சிக் காட்சி; ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த 21 வயது பெண்…. #Brazil #Bungeejump #safetyrope #News18Tamilnadu

▶️Watch Live | https://t.co/4tgGWSqe3O pic.twitter.com/399Kl39Xl4


— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 14, 2026

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மரியாவின் ஆண் நண்பர் கத்தி கதறித் துடிதுடிக்க ஒரு கட்டத்தில் அவர் மயக்கமடைந்து மருத்துவமனைக்குத் தூக்கி செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகப் பிரேசில் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். போலீசாருக்கு பயந்து மரியாவை தூக்கி வீசிய இருவரும் காட்டுக்குள் தப்பி ஓடி உள்ளனர்.

வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டரின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மரியாவின் உயிரிழப்பும் இந்த கடைசி வீடியோ பீரேசில் மட்டுமல்லாது உலகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

40 மீட்டர் உயரம்.. பஞ்சி ஜம்பிங் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ!

Read More

Previous Post

7 வயதில் கோடிங்! 16 வயதில் ரூ.100 கோடி மதிப்பிலான நிறுவனம்! AI உலகத்தை கலக்கும் இளம் CEO! யார் இவர்? | Meet Pranjali Awasthi: The 16-Year-Old Founder Behind a Rs 100 Crore AI Startup

Next Post

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹம்ஸாவைத் தலைவராக விரும்புகின்றனர் | Makkal Osai

Next Post
பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹம்ஸாவைத் தலைவராக விரும்புகின்றனர் | Makkal Osai

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹம்ஸாவைத் தலைவராக விரும்புகின்றனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin