Last Updated:
பிரான்ஸில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் எவியன் நகரில் வரும் 15 முதல் 17 ஆம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் பிரதமர் மோடி, உலகளாவிய தெற்கு நாடுகளின் எதிர்பார்ப்புகளை முன்னிலைப்படுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்திப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஓமன் கடற்பகுதியில் 3 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை திறப்பது, அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், ஹெச்1 பி விசா உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


