நெருக்கடி நிலை காலத்தில், தனது தேர்தலைச் செல்லுபடியாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் பல சட்டத்திருத்தங்களை அவசரமாகக் கொண்டுவந்தார். மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தங்கள் (1974, 1975 வருட சட்டதிருத்தங்கள்) கொண்டு வந்தார். தேர்தல் முறைகேடுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததற்கான அனைத்துக் காரணங்களையும் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். மேலும், ஒருபடி மேலே சென்று, இந்திய அரசியலமைப்பின் 39-வது திருத்தச் சட்டத்தின் வாயிலாகப் புதிதாக 329A என்ற விதியையும் சேர்த்தார். இதன் மூலம், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் அகியோரின் தேர்தல்களை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது எனச் சட்டம் இயற்றினார்.


