Last Updated:
அல் தாலா மாகாணத்தில் உள்ள ஹர்தா தம்ட் என்ற செயல்பாட்டில் இல்லாத எரிமலைக் குழியில் அந்தர் சாகசத்தில் ஈடுபட்டார்.
ஏமனின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்பட்ட நபர், சாகசத்தின் போது எரிமலை பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராக் அந்தர் என்பவர் ஏமன் நாட்டில் உள்ள மலைகள் மற்றும் ஆபத்தான பாறைகளில் ஏறி கவனம் பெற்றார். சூப்பர் ஹீரோ போல மலை உச்சிகளில் ஏறி சாகசத்தில் ஈடுபட்டு வந்த அந்தருக்கு அந்நாட்டில் ரசிகர்கள் பலர் இருந்தனர்.

இந்நிலையில், அல் தாலா மாகாணத்தில் உள்ள ஹர்தா தம்ட் என்ற செயல்பாட்டில் இல்லாத எரிமலைக் குழியில் அந்தர் சாகசத்தில் ஈடுபட்டார்.
இதனைக் காண ஏராளமானோர் குவிந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர் குழிக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

