• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனை: காங்கிரஸை சாடிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனை: காங்கிரஸை சாடிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 13, 2026 2:48 PM IST

அக்டோபர் 7, 2026 அன்று, பிரதமர் மோடி முதலமைச்சர் மற்றும் பிரதமர் என நாட்டின் இரு உயரிய நிர்வாகப் பொறுப்புகளில் 25 ஆண்டுகால பொது வாழ்க்கையை நிறைவு செய்யவிருக்கிறார்

பிரதமர் மோடி - புஷ்கர் சிங் தாமி
பிரதமர் மோடி – புஷ்கர் சிங் தாமி

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பிரதமருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெஹ்ராடூனில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தையும் தற்போதைய பாஜக ஆட்சியையும் ஒப்பிட்டுப் பேசினார்.

2014, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து நரேந்திர மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்ததன் மூலம், நாடு இப்போது வெற்று முழக்கங்களுக்கு அல்லாமல், செயல்திறனுக்கே வாக்களிக்கிறது என்பதை நாட்டு மக்கள் நிரூபித்துள்ளனர் என்று முதல்வர் தாமி குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆண்டுகால ஆட்சி என்பது பொது மக்கள் நலன், நல்லாட்சி, சேவை, ஏழை எளியோரின் மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றும், மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலக அரங்கில் ஒரு நம்பிக்கையான, பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க நாடாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திட்டங்கள் அனைத்தும் கோப்புகளோடு மட்டுமே முடங்கிக் கிடந்தன என்றும், ஆனால் மோடி அரசு அவற்றை நிஜமாக்கிக் காட்டியுள்ளது என்றும் அவர் சாடினார். முன்னதாக அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் தொடக்க விழாவிற்காக மக்கள் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது; ஆனால் தற்போதைய ஆட்சியில் திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்பது அமைப்பின் ஒரு அங்கமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், தற்போதைய மோடி அரசு ‘நேரடி பயன் பரிமாற்றம்’ (DBT) மூலம் ரூ. 4.31 லட்சம் கோடியை நேரடியாகப் பயனாளிகளின் கணக்குகளுக்கு மாற்றியுள்ளது. இதன் மூலம் டெல்லி அல்லது டெஹ்ராடூனில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு ரூபாயும் இடைத்தரகர்கள் இன்றி, முழுமையாகப் பயனாளர்களைச் சென்றடைகிறது என்றார்.

காங்கிரஸ் கட்சி பல தசாப்தங்களாக ராமர் கோவில் விவகாரத்தைத் தாமதப்படுத்தி, ராம சேதுவை வெறும் கற்பனை என்று கூறியதாக முதல்வர் தாமி விமர்சித்தார். ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ராமர் கோவில் கட்டுமானம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு, நாட்டின் நம்பிக்கை மற்றும் பெருமைக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், காங்கிரஸ் அரசு எப்போதும் திருப்திப்படுத்தும் அரசியலையே  பின்பற்றியது; ஆனால் மோடி அரசு மக்களின் திருப்தி மற்றும் அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. விவசாயிகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் கையெழுத்தையே ‘PM-கிசான் சம்மான் நிதி’ திட்டத்திற்கான கோப்பில்தான் இட்டார் என்பதையும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சுட்டிக்காட்டினார்.

வரும் அக்டோபர் 7, 2026 அன்று, பிரதமர் மோடி முதலமைச்சர் மற்றும் பிரதமர் என நாட்டின் இரு உயரிய நிர்வாகப் பொறுப்புகளில் 25 ஆண்டுகால பொது வாழ்க்கையை நிறைவு செய்யவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

Next Post

SBI-ல் வெறும் 2 ஆண்டுகளில் வட்டியாக ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்.. அசத்தல் திட்டம்! | SBI Scheme

Next Post
SBI-ல் வெறும் 2 ஆண்டுகளில் வட்டியாக ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்.. அசத்தல் திட்டம்! | SBI Scheme

SBI-ல் வெறும் 2 ஆண்டுகளில் வட்டியாக ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்.. அசத்தல் திட்டம்! | SBI Scheme

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin