இந்த அறிவிப்பின்படி, 22 முதல் 30 சதவீதம் வரை எத்தனால் கொண்ட E22, E25, E27, E30 பெட்ரோல் கலவைகளுக்கு மத்திய கலால் வரி விலக்கு பொருந்தும். இது கலால் வரிக்கு மட்டுமல்லாமல், சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் ஆகியவற்றுக்கும் பொருந்தும். இந்த அறிவிப்பு, 2002 மற்றும் 2017-ல் வெளியிடப்பட்ட கலால் விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக, குறைந்த எத்தனால் சதவீதம் கொண்ட எரிபொருள்களுக்கு மட்டுமே வரி விலக்கு வசதி இருந்தது. ஆனால், இப்போது அதே வசதி அதிக எத்தனால் கலவைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுவதும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. 2030-க்குள் இதை அடையும் அரசின் இலக்கு, திட்டமிடப்பட்ட காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டுவிட்டதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பெட்ரோல் விலை குறையுமா? என்றால், இப்போது குறையாது என்று மணி கண்ட்ரோல் (Moneycontrol) தெரிவிக்கிறது.


