2026 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகள் திட்டமிடப்பட்ட தவணை அட்டவணையின்படி நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த பரீட்சைகளுக்குரிய பாடத்திட்டங்களை முழுமையாகக் கற்பித்து முடித்து, மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடசாலையில் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் காணப்படின், அதற்கென முன்கூட்டிய திட்டமிடலுடன் செயற்பட்டு, மேலதிக நேரத்தை ஒதுக்கியேனும் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான நடடிவடிக்கைகளை எடுக்குமாறும், இது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்கான கடிதம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். R

