• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை.. பிசிசிஐ இறுதிக்கட்ட முடிவு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை.. பிசிசிஐ இறுதிக்கட்ட முடிவு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 12, 2026 8:45 PM IST

2027 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு புதிய மாற்றமாக ஒட்டுமொத்தமாக 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. இவை தலா 7 அணிகள் கொண்ட இரண்டு குரூப்களாகப் பிரிக்கப்படும்.

ஐசிசி உலகக்கோப்பை
ஐசிசி உலகக்கோப்பை

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இத்தொடர் 2027 அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இத்தொடரை கூட்டாக நடத்துகின்றன. கடந்த மே மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த தேதிகள் தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான இறுதி ஒப்புதல் வரும் ஜூலை மாதம் எடின்பர்க்கில் நடைபெறவுள்ள ஐசிசி-யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் (AGM) வழங்கப்படும்.

கடந்த 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு, சுமார் 24 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட் உலகின் மிக உயரிய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மீண்டும் ஆப்பிரிக்க கண்டத்திற்குத் திரும்புவது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கோப்பைத் தொடரின் ஒட்டுமொத்த 54 போட்டிகளில், பெரும்பான்மையான 41 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள 8 முக்கிய மைதானங்களில் நடைபெறவுள்ளன. ஜிம்பாப்வே 8 முதல் 10 போட்டிகளை தங்களது நாட்டின் மூன்று மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப், புலவாயோவில் உள்ள குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் விக்டோரியா ஃபால்ஸ் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ‘ஃபேல் மோசி-ஓவா-துன்யா’ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவை அடங்கும். இந்த புதிய மைதானத்தின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து, 2027 மே மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளை நமீபியா நடத்தவுள்ளது.

2027 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு புதிய மாற்றமாக ஒட்டுமொத்தமாக 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. இவை தலா 7 அணிகள் கொண்ட இரண்டு குரூப்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ (Super Six) சுற்றுக்கு முன்னேறும்.

ஐசிசி-யின் முழுநேர உறுப்பினர்களாக இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. ஆனால், நமீபியா அணி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடி வென்றால் மட்டுமே உலகக் கோப்பைக்குள் நுழைய முடியும்.

Read More

Previous Post

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை: இடைக்கால அறிக்கை வெளியீடு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

IRCTC Lower Berth Tips | ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க.. ஐஆர்சிடிசி அசத்தல் டிப்ஸ்!

Next Post
IRCTC Lower Berth Tips | ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க.. ஐஆர்சிடிசி அசத்தல்  டிப்ஸ்!

IRCTC Lower Berth Tips | ரயிலில் லோயர் பெர்த் வேண்டுமா? இத மட்டும் பண்ணுங்க.. ஐஆர்சிடிசி அசத்தல் டிப்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin