• Login
Friday, June 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை: இடைக்கால அறிக்கை வெளியீடு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை: இடைக்கால அறிக்கை வெளியீடு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 12, 2026 10:43 PM IST

விசாரணை நிறைவடையும் வரை ஊடகங்களும் பொதுமக்களும் முன்கூட்டியே எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம்

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை
ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை

கடந்த 2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத் சர்தார் வல்லாபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா ஏஐ-171 போயிங் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

இந்தத் துயரமான விபத்து நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. விமான விபத்து விதிகள் 2017, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளின்படி ஏஏஐபி இந்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கை 2025 ஜூலை 12 அன்று வெளியிடப்பட்டது. கடந்த ஓராண்டாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் விமானத்தின் அமைப்பு, விமானப் பதிவுத் தரவுகள், எஞ்சின் பாகங்கள், பராமரிப்புப் பதிவுகள் போன்ற ஆதாரங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணையின் இறுதி அறிக்கை, அனைத்து நடைமுறைகளும் முடிந்தவுடன் விரைவில் வெளியிடப்படும். விபத்து குறித்த விசாரணையின் நோக்கம் விமானப் பாதுகாப்பை மேம்படுத்துவதே தவிர, எவர் மீதும் குற்றம் சுமத்துவது அல்ல. எனவே விசாரணை நிறைவடையும் வரை ஊடகங்களும் பொதுமக்களும் முன்கூட்டியே எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம் என விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏஐபி) கேட்டுக்கொண்டுள்ளது.

First Published :

Jun 12, 2026 10:43 PM IST

Read More

Previous Post

2026 பிஃபா: அரங்கேறிய கண்கவர் காட்சிகள்

Next Post

2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை.. பிசிசிஐ இறுதிக்கட்ட முடிவு | கிரிக்கெட் செய்திகள்

Next Post
2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை.. பிசிசிஐ இறுதிக்கட்ட முடிவு | கிரிக்கெட் செய்திகள்

2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை.. பிசிசிஐ இறுதிக்கட்ட முடிவு | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin