பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ இந்த கட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (12) அறிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நியாயமான காரணங்களின்றி தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, வருண ஜயசுந்தரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்திற்கு அறிவிப்பு
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு இந்த விபரத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மனுவின் பிரதிவாதிகளாகப் காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

