நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது குறித்து நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பின் நீதிபதிகளது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஓய்வுபெறும் வயது
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீதிபதிகளுக்கு மேலதிகமாக ஏனைய சில தொழில்வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் என்ற ரீதியில் அந்தக் கோரிக்கைகள் குறித்து சாதகமாகப் பரிசீலித்து வருகின்றோம், எனினும் அவற்றில் சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தபோதிலும், சில கோரிக்கைகள் அரசியல் பின்னணியைக் கொண்டவை.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை“ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

