காலிமுகத்திடல் கடலுக்குள் நீராடச் சென்ற 11 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த துயர சம்பவம் கொழும்பு – காலிமுகத்திடல் கடலில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலிமுகத்திடல் கடலில் 6 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து அடித்துச் செல்லப்பட்ட ஐந்து சிறுவர்களை மீட்டிருந்தனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மூவர் லேடி ரிட்ஜ்வே (Ridgeway) சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய மற்றுமொரு மாணவனைத் தேடி, காவல்துறை உயிர் காப்பு அதிகாரிகளும் கடற்படை சுழியோடி குழுவினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோட்டை காவல் நிலையத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

