இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, சமீபத்திய உலகத் தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து, இலங்கை தடகள வரலாற்றில் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
தற்போது 1,324 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ள ரூமேஷ் தரங்க, இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவைப் பின்தள்ளி, ஆசியாவின் முதன்மை ஈட்டி எறிதல் வீரராகவும் உருவெடுத்துள்ளார். உலகத் தடகள தரவரிசைப் பட்டியலில் இலங்கை ஆண் வீரர் ஒருவர் அடைந்த மிக உயர்ந்த நிலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


