பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தனது இலங்கை பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரியவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, இருவரும் தங்களது துறைகள் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், மிகவும் நட்புறவுடனும் உற்சாகத்துடனும் உரையாடினர். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


