• Login
Monday, June 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

காணாமல் போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
June 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
காணாமல் போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
காணாமல் போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவரே இவர். கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் அவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவர் காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்துப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று மாலை அவரது சடலம் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

சலே வைத்தியசாலையில் அனுமதி

Next Post

“டிரம்ப்தான் சரி செய்ய வேண்டும்” – ஈரான் உச்ச தலைவரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு!

Next Post
“டிரம்ப்தான் சரி செய்ய வேண்டும்” – ஈரான் உச்ச தலைவரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு!

“டிரம்ப்தான் சரி செய்ய வேண்டும்” - ஈரான் உச்ச தலைவரின் ஆலோசகர் பரபரப்பு பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin