Last Updated:
விமானத்தின் முன் சக்கரம் திடீரென சரிந்த காட்சி வெளியாகி அதிர்வலை.
ஜெர்மனியில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த போயிங் விமானத்தின் முன் சக்கரம் திடீரென சரிந்த காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லுப்தான்சா நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 787 ரக விமானத்தின் முன் சக்கரம், எதிர்பாராத விதமாக திடீரென சரிந்தது. பிராங்க்பர்ட் நகரில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் புறப்படத் தயாராக இருந்த அந்த விமானத்தில், பயணிகள் ஏறுவதற்கு முன்பாக இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தின் போது விமானப் பணியாளர்களும் தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்களும் மட்டுமே உள்ளே இருந்ததாக லுப்தான்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Following a gear collapse at the gate in Frankfurt, Lufthansa 787-9 D-ABPQ has been significantly damaged. Today’s LH450 has been canceled. We are awaiting more information on any potential injuries. pic.twitter.com/FTBK4m2WyS
— Flightradar24 (@flightradar24) June 4, 2026
காயமடைந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தின் முன்பகுதி தரையை நோக்கிச் சாய்ந்து நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து லுப்தான்சா நிறுவனமும் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விபத்துக்குள்ளான போயிங் விமானம் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டு, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Jun 05, 2026 10:44 AM IST

