Last Updated:
பொதுவாக இந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை பொழியும், அந்த பருவமழையை நம்பியே நீலகிரியில் அதிகமான அளவில் விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசியாக விளங்குவதால் இந்த மலை மாவட்டத்தில் பல்வேறு மலைக் காய்கறி பொருட்கள் பயிர் செய்யப்படுகிறது. அதிலும் நீலகிரியில் விளைவிக்கக் கூடிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ், வெள்ளைப் பூண்டு மற்றும் ஆங்கில காய்கறி வகைகள் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பான முறையில் ஏற்றுமதி நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கக்கூடிய விளைப்பொருட்கள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதிக்காக கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரியின் இயற்கை அமைப்பும் நீர்நிலைகளும் சுவையான காய்கறிகளை உருவாக்குகிறது.
முன்பெல்லாம் மூன்று போகங்களாக விவசாயம் நடைபெற்று வந்தது. ஆனால் காலநிலை மாற்றத்தால் வருடத்திற்கு நான்கு போகங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய பயிர்களும் விளைச்சல் குறைகின்றது.
விவசாயிகள் அதிகமாக லாபம் ஈட்டும் நோக்கத்தில் சுழற்சி முறையில் காய்கறிகளை பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் இந்த காலகட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொழியும் என்பதால் அந்த பருவமழையை நம்பியே அதிகமான அளவில் விவசாயிகள் விதைக்கின்றனர்.
பலரும் முன்கூட்டியே கேரட், பீட்ரூட் ஆகியவற்றை விதைத்தும் அறுவடையும் செய்து வரும் பட்சத்தில் பல்வேறு நிலங்களில் பருவமழையை நம்பி கேரட் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை விதைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபடுகின்றனர் விவசாயிகள்.
மழையை நம்பியே விவசாயம் செய்கிறோம். பருவமழை சிறப்பாக இருந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் என நம்பிக்கையோடு விதைக்கின்றோம் என தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
The Nilgiris,Tamil Nadu
Jun 04, 2026 12:50 PM IST

