ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (03) பிற்பகல் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் காயமடைந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 55 பேர் கல்பாத மற்றும் ஹொரண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்கள் பணியில்
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

