Last Updated:
நாடு தழுவிய இந்த கொடூரத் தாக்குதலில் 22-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது 60 விநாடிகளுக்குள் 4 ஏவுகணைகளை ஏவி இரவோடு இரவாக ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீதான, தனது வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை, கீவ், டினிப்ரோ, போல்டாவா, கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து 73 ஏவுகணைகளையும், 656 ஆளில்லா விமானங்களையும் ஏவி ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
Russian drones and missiles pounded Kyiv and other Ukrainian cities, killing at least 18 people and wounding over 100. Russia had warned last week of ‘systematic strikes’ on Kyiv in retaliation for an attack on a dormitory that killed 21 people https://t.co/xvoYi5RDB7 pic.twitter.com/hJGeNMofCs
— Reuters (@Reuters) June 2, 2026
குறிப்பாக, கீவ் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் 60 விநாடிகளுக்குள் 4 அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகள் அடுத்தடுத்து விழுந்து வெடித்தன. உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த ஏவுகணைகள் எதையும் சுட்டு வீழ்த்தவோ அல்லது திசை திருப்பவோ முடியவில்லை. ஏவுகணைகள் நேரடியாக இலக்குகளைத் தாக்கியதால், கீவ் நகரம் முழுவதும் தொடர் வெடிச்சத்தங்களும், பெரும் தீ விபத்துகளும் ஏற்பட்டன. நாடு தழுவிய கொடூரத் தாக்குதலில் 22-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
Jun 03, 2026 10:54 AM IST


