கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் போரில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி முதல் “தற்காலிக போர் நிறுத்தம்’ இருந்து வந்தது.
ஆனால், நேற்று குவைத், பஹ்ரைன் போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் தலைமையகத்தையும், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனி விமானத் தளத்தையும் தாக்கியதாகவும் ஈரான் கூறியது.

“மத்தியக் கிழக்கு நாடுகள் முழுவதும் ஜூன் 2 அன்று ஈரான் நடத்த முயன்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகள் ஈரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததோடு, கெஷ்ம் தீவிலும் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகளை நோக்கிப் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இருப்பினும், அவை எதுவுமே இலக்குகளைத் தாக்கவில்லை.
குவைத்தை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஈரானிய ஏவுகணைகள் இலக்கை எட்டாமல் வழியிலேயே விழுந்து நொறுங்கின.

