மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டு வேலைகளை செய்து வந்த பெண் மேற்கு வங்க மாநிலத்தில் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, வீட்டு வேலை செய்த பெண் கலிதா மாஜி அமைச்சராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
பா.ஜ.க சார்பில் களமிறக்கம்
37 வயதான இவர், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ சார்பில் களம் இறங்கி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி போட்டியாளரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இவர் போட்டியிட்ட ஆஸ்கிராம் சட்டசபை தொகுதி மக்கள் மத்தியில் கலிதா மாஜிக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு.
2006ல் பிளம்பர் வேலை செய்து வந்தவரை கலிதா மாஜி திருமணம் செய்து கொண்டார்.
பல ஆண்டுகளாக வீட்டு வேலைக்காரி
பல ஆண்டுகளாக குஸ்காரா பகுதியில் வீட்டு வேலைக்காரியாகப் பணிபுரிந்து, சுத்தம் செய்தல், சமையல் மற்றும் பராமரிப்புப் பணிகளை செய்து வந்தார். அவர் மாதத்திற்கு 4 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். பிரதமர் மோடியே தனது அரசியல் பயணத்துக்கு உத்வேகமாக இருந்ததாக கலிதா மாஜி தெரிவித்து இருக்கிறார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

