Last Updated:
எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் செல்ல முற்றிலும் தடை.
அமெரிக்காவின் ஹவாயில் உள்ள கிலாவியா எரிமலை சீற்றமடைந்து தீப்பிழம்பு ஆறாய் ஓடிய காட்சிகள் தான் இவை…
ஹவாய் தீவில் உள்ள கிலாவியா எரிமலை கடந்த சில மாதங்களாக தொடர் சீற்றத்தில் காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி அவ்வப்போது எரிமலை வெடித்து சாம்பல் புகையை கக்கி வருகிறது. இந்நிலையில், 48ஆவது முறையாக கிலாவியா எரிமலை சீற்றமடைந்து தீப்பிழம்பு ஆறு போல் ஓடுகிறது.
ஈபிள் கோபுரம் உயரத்திற்கு எரிமலை பிழம்பு வெளியேறும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்திருந்த நிலையில், எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிமலையின் வடக்குப் பகுதியில் இருந்து உமிழப்பட்ட நெருப்புக் குழம்பு வான்நோக்கி சுமார் 650 அடி (200 மீட்டர்) உயரம் வரை சீறிப் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

