Last Updated:
கரப்பான்பூச்சி ஜனதா பார்டி டிஜிட்டல் நையாண்டி இயக்கம் நிஜ போராட்டமாக மாறுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதுமே இணைய உலகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மோதி வருகிறது.
இணையதளங்களில் ட்ரெண்டான ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற டிஜிட்டல் நையாண்டி இயக்கம், தற்போது நிஜ போராட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா பார்டி என்ற இணையதள நையாண்டி இயக்கம் இந்தியாவில் கவனம் பெற்றது.
ஆம் ஆத்மி முன்னாள் நிர்வாகியான அபிஜித் திப்கே, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற நிலையில், அங்கிருந்தவாறே தொடங்கிய இந்த நையாண்டி இயக்கத்துக்கு இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. எனினும் கரப்பான்பூச்சி ஜனதா பார்டியின் சமூகவலைதள கணக்கு முடக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி திரும்புவதாக அறிவித்துள்ள அபிஜித் திப்கே, வரும் 6-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதுமே இணைய உலகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து மோதி வருகிறது. அபிஜித்தின் அறிவிப்புக்கு சிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் வேறு சிலர் இதை நாடகம் என விமர்சித்துள்ளனர்.


