2026 ஆம் ஆண்டிற்கான தற்பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்துள்ள உரிமையாளர்கள், அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்த பின்னர், தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தங்களது துப்பாக்கியை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை தற்பாதுகாப்பு துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் அனுமதிப்பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்
எனவே, அனைத்து உரிமையாளர்களும் தங்களது துப்பாக்கியைச் சமர்ப்பித்து, குறித்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

