டெல்லியில் தண்ணீரை வீணடிப்போருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. மேலும் ஹரியானா அரசு டெல்லிக்கு தரவேண்டிய தண்ணீரை விடுவிக்காததால் தட்டுப்பாடு நிலவுகிறது.
எனினும் பல பகுதிகளில் தண்ணீர் வீணாக்கப்படுவதாகவும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
அதை தடுக்கும் விதமாக டெல்லி அரசு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தண்ணீரை வீணடித்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி குடிநீர் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் கண்காணித்து, குழாய்கள் மூலம் வாகனங்களை கழுவுவினாலும் தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிந்தாலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)