UPI விதி:UPI மோசடியைக் குறைப்பதற்காக NPCI புதிய விதிகளைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளின்படி, ஜூன் 30, 2025 முதல், அனைத்து UPI செயலிகளும் பணம் செலுத்துவதற்கு முன்பு, வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உண்மையான பயனாளியின் பெயரை மட்டுமே காண்பிக்க வேண்டும். அதாவது, QR குறியீடு, கைபேசி எண் அல்லது பயனர் குறிப்பிடும் பெயருக்குப் பதிலாக, நீங்கள் பணம் அனுப்பும் நபர் அல்லது வணிகரின் சரிபார்க்கப்பட்ட பெயர் இனி காண்பிக்கப்படும். இது போலிப் பெயர்களைப் பயன்படுத்தி செய்யப்படும் UPI மோசடியைக் குறைக்கும் என்றும், பணம் செலுத்துவதற்கு முன்பு உண்மையான நபரை அடையாளம் காண பயனர்களுக்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


